புத்தளத்தில் இராணுவ பஸ் மோதி விபத்து – 7 பேர் படுகாயம்!

புத்தளம்- கறுவலகஸ்வெவ பகுதியில், இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 7 ​பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் காயமடைந்தவர்கள் ,புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களை ஏற்றிச்சென்ற வான் ஒன்றுடன், இராணுவ பஸ் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் , வானில் பயணித்த பெண்களே படுகாயமடைந்துள்ளனர். அநுராதபுரத்திலிருந்து புத்தளம் நோக்கி, இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுவரும் சிப்பாய்களுடன் பயணித்த பஸ், முன்னால் பயணித்த குறித்த வானை முந்திச் செல்ல முற்பட்டபோதே, குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக, … Continue reading புத்தளத்தில் இராணுவ பஸ் மோதி விபத்து – 7 பேர் படுகாயம்!